வானவில் : வீட்டை அலங்கரிக்க உதவும் செயலி


வானவில் : வீட்டை அலங்கரிக்க உதவும் செயலி
x
தினத்தந்தி 23 Jan 2019 2:58 PM IST (Updated: 23 Jan 2019 2:58 PM IST)
t-max-icont-min-icon

வீடு கட்டியவுடன் எந்த வகை சோபா வாங்கலாம், எப்படி நமது வரவேற்பறையை அலங்கரிக்கலாம் என்று நாம் மனதை குழப்பி கொள்வதுண்டு.

புது வீடு கட்டுபவர்களுக்கு மட்டுமின்றி நீண்ட நாட்களாக இருக்கும் அமைப்பை மாற்றி அமைக்க விரும்புபவர்களுக்கும் இதே நிலை தான்.

இதற்கென இன்டீரியர் டிசைனர் யாரையும் பணியமர்த்தாமல் நாம் விருப்பப்படி அமைத்துக்கொள்ள உதவுகிறது இந்த ரூம் ஏ.ஆர். என்னும் செயலி. வளர்ந்து வரும் செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இது வீட்டின் அமைப்பிற்கு ஏற்றவாறு பர்னிச்சர்களை நமக்கு காட்டும்.

அதிலிருந்து நமக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். நாம் தேர்ந்தெடுத்தவைகளை எந்த கடையில் வாங்கலாம் என்றும் நமக்கு தெரிவிக்கும். இதனால் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் ஒரே நேரத்தில் பயனளிக்கிறது இந்த ரூம் ஏ.ஆர். ஆப்.

Next Story