வானவில் : ஏ.பி.எஸ். வசதியுடன் யமஹா ஆர். 15
யமஹா நிறுவனம் தனது ஆர்.15 மோட்டார் சைக்கிளில் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
2019- ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு வரும் வாகனங்கள் அனைத்தும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) எனப்படும் வசதியுடன் தயாரிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக யமஹா நிறுவனம் தனது ஆர்.15 மோட்டார் சைக்கிளில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையை ரூ. 1.39 லட்சமாகும். தற்போது ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளதால் முந்தைய விலையை விட தற்போது ரூ.12 ஆயிரம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக வந்துள்ள டார்க்நைட் வண்ணமானது மேட் பினிஷ் தன்மை கொண்டது. இந்த வசதி எப்.இஸட்., சல்யூடோ ஆர்.எஸ்., ரேஇஸட்.ஆர். ஆகிய மாடலில் உள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் 155 சி.சி. திறன் கொண்டது. நான்கு வால்வுகளோடு லிக்விட் கூல்டு பியூயல் இன்ஜெக்சன் தன்மை கொண்டது. 19.3 ஹெச்.பி. திறன் 10 ஆயிரம் ஆர்.பி.எம். 15 நியூட்டன் மீட்டர் சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. இதில் 6 கியர்கள் உள்ளன. அத்துடன் ஸ்லிப் கிளட்ச் வசதியும் கொண்டது.
இது முழுவதும் டிஜிட்டல் செயல்பாடுகளைக் கொண்டது. இதில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, பின்புற விளக்குகள் உள்ளன. புதுப்பொலிவோடு கூடுதல் பாதுகாப்பு அம்சமான ஏ.பி.எஸ். வசதி வாடிக்கை யாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story