மாவட்ட செய்திகள்

வானவில் : பாதுகாப்பான ஸ்மார்ட் பேட்லாக் பூட்டு + "||" + Vanavil : Secure smart batlock lock

வானவில் : பாதுகாப்பான ஸ்மார்ட் பேட்லாக் பூட்டு

வானவில் : பாதுகாப்பான ஸ்மார்ட் பேட்லாக் பூட்டு
வீடு மட்டுமின்றி நமது பயணப் பெட்டிகள், பீரோ ஆகியவற்றை பாதுகாக்க பூட்டுகள் அவசியமாகின்றன.
எண்களைக் கொண்டுத் திறக்கும் பேட்லாக் பூட்டுகள் சிறியது முதல் பெரிய அளவுகளில் கிடைக்கின்றன. இந்த இக்லூ ஹோம் ஸ்மார்ட் பூட்டு மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதால் தரமான பாதுகாப்பை நம் உடைமைகளுக்குத் தருகிறது. இந்த பூட்டை உபயோகிப்பவர் அனைவரும் எந்த செயலியும் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை. வங்கிகளில் உபயோகிக்கும் பின் கோடு முறையில் இவைகளைத் திறக்கலாம். இதன் பின்கோடுகளை வேண்டியவர்களுக்கு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்து அவர்களை பூட்டை திறக்கச் செய்யலாம் அல்லது புளூடூத் மூலம் அவர்களுக்கு கோடுகளை அனுப்பலாம். ஒரே பூட்டை பலரும் உபயோகிக்கலாம்.

இதன் சொந்தக்காரர் மட்டும் செயலியின் துணையுடன் பூட்டு எப்போது திறக்கப்பட்டுள்ளது, யார் திறந்தது போன்ற விவரங்களை பெற முடியும். உயர்தரமான ஸ்டீல் கொண்டு செய்யப்பட்டுள்ளதால் துரு பிடிக்காது. பேட்டரியில் இயங்கும் இந்த பூட்டு ஆயுட்காலம் முடியும் போது எச்சரிக்கை செய்யும்.

உள்ளே இருக்கும் பேட்டரி முடிந்து விட்டால் வெளியில் ஜம்ப் ஸ்டார்ட் செய்து இதனைத் திறக்க முடியும். மிகவும் பாதுகாப்பான அம்சங்கள் கொண்ட இந்த பூட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி மாற்றினால் போதுமானது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : வாட்ச்மேன் ரோபோ
பெரிய அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் எத்தனை வாட்ச்மேன்கள் இருந்தாலும் போதாது.
2. வானவில் : கேடு விளைவிக்காத பேட்டரி
வழக்கமாக பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் விஷத்தன்மை உள்ளதால் மண்ணிற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியவை.
3. வானவில் : செடிகளை வளர்க்கும் நவீன பூந்தொட்டி
இது நவீன உலகம். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்து துறைகளிலும் நமது வாழ்க்கை முறையை எளிதாக்குகின்றன.
4. வானவில் : பியூமாவின் நவீன ஷூ
விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பியூமா, நைக், அடிடாஸ் போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
5. வானவில் : திங்க்வேர் ரியர் வியூ கேமரா
இது முழுமையான ஹெச்டி ரியர்வியூ கேமராவாகும்.