வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மானியவிலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019-ம் நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு மற்றும் பதிவு அஞ்சல் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, தமிழக அரசு வேலைக்கு செல்லும் பெண்கள் அம்மா மானிய விலையிலான ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க காலகெடுவை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவித்து உள்ளது.
எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story