வேலைக்கு செல்ல தந்தை எதிர்ப்பு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வேலைக்கு செல்ல தந்தை எதிர்ப்பு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2019 4:00 AM IST (Updated: 23 Jan 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

வேலைக்கு செல்ல தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் சரவணன் (வயது 22). எம்.காம் படித்தவர். தற்போது சரவணன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பருடன் திருவண்ணாமலையில் சர்வேயர் உதவியாளர் வேலைக்காக கடந்த 2 மாதங்களாக சென்று பணிபுரிந்து வந்தார்.

அவர் செய்யும் வேலை வரதராஜனுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தன் மகன் சரவணனை இந்த வேலைக்கு செல்லவேண்டாம் என கூறியுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த சரவணன் நேற்று முன்தினம் தன்னுடைய அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வரதராஜன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story