திருவாரூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலைமறியல் 2,186 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2,186 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓயவூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்றுமுன்தினம் தொடங்கினர்.
நேற்று 2-வது நாள் போராட்டத்தையொட்டி திருவாரூர் ரெயில் நிலையத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பிரகாஷ், சக்திவேல், டி.தியாகராஜன், முத்துவேல், எஸ்.தியாகராஜன், வெங்கடேசன், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 171 பெண்கள் உள்பட 330 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல மன்னார்குடி பெரியார் சிலை அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற 518 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நீடாமங்கலத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோஒருங்கிணைப்பாளர் குரு.செல்வமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் ஈவெரா உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சாலைமறியலில் ஈடுபட்ட 300 பேரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் நீடாமங்கலம் -கும்பகோணம், நீடாமங்கலம்-நாகப்பட்டினம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நீடாமங்கலம் பழைய தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி பெரியார் சிலை பகுதியை வந்தடைந்தனர்.
வலங்கைமான் கடைத்தெரு ராமர் சன்னதி பஸ் நிறுத்தத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் புஷ்பநாதன் தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மனோகரன், கணேசன், எட்வர்ட், வேல்முருகன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழாசிரியர் கழக வட்ட தலைவர் பாலமுருகன், பட்டதாரி ஆசிரியர் கழக வட்ட தலைவர் வள்ளிமணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுகன், ராதா ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட 313 பேரை போலீசார் கைது செய்தனர். வலங்கைமான் தாலுகாவில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படாததால் வெறிச்சோடியது. மேலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் செயல்படாததால் மாணவ-மாணவிகளுக்கு 2-வது நாளாக சத்துணவு வழங்கப்படவில்லை.
குடவாசல் அருகே ஓகை ஆற்று பாலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, உமாநாத், சுந்தரலிங்கம், ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தெட்சிணாமூர்த்தி, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மா.மீனாட்சிசுந்தரம் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த சாலை மறியல் காரணமாக திருவாரூர்-கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 325 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டியில் புதிய பஸ் நிலையம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையேயான போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 400 பேரை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணா ஆகியோர் கைது செய்தனர்.

Related Tags :
Next Story