மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் போல் நடித்துகாதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது + "||" + Acting like a policeman Detainee arrested for love couples

போலீஸ்காரர் போல் நடித்துகாதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது

போலீஸ்காரர் போல் நடித்துகாதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது
போலீஸ்காரர் போல் நடித்து காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை, 

மும்பை கோராய் கடற்கரை மற்றும் மனோரி பகுதிக்கு தினசரி பல காதல் ஜோடிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் போலீஸ்காரர் என கூறிக்கொண்டு ஒருவர், காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் கோராய் கடற்கரைக்கு வந்திருந்த ஒரு காதல் ஜோடியிடம் போலீஸ்காரர் என கூறிக்கொண்டு ஒருவர், உங்கள் காதல் விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவிக்க போவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் அந்த காதல் ஜோடி பயந்தனர். பணம் தந்தால் பெற்றோரிடம் கூறாமல் இருப்பதாக கூறினார். இதையடுத்து காதல் ஜோடி கையில் இருந்த பணத்தை கொடுத்தனர். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து கிளம்பினார். இதனை கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போலீஸ்காரர் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்த மனோஜ் யோகி (வயது35) என்பது தெரியவந்தது.

அவர், போலீஸ்காரர் போல் நடித்து காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து வந்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரையூர் அருகே போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ வீடியோ எடுத்த 2 பேர் கைது
சாப்டூர் போலீஸ் நிலையம் முன்பு ‘டிக்–டாக்’ ஆப் மூலம் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 வாலிபர்களை சாப்டூர் போலீசார் கைது செய்தனர்.
2. தென்பெண்ணை ஆற்று பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தல் வாலிபர் கைது
தென்பெண்ணை ஆற்று பகுதியில் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ரூ.65 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.
4. தேவர்சோலையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் 5 பேர் கைது
தேவர்சோலையில் துப்பாக்கி தோட்டாக்களுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தொண்டி பகுதியில் கடலில் வெடிகுண்டு வீசி மீன்பிடிப்பில் ஈடுபட்டவர் கைது 46 டெட்டனேட்டர்கள்–ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
தொண்டி பகுதியில் சட்டவிரோதமாக கடலில் வெடிகுண்டுகளை வீசி மீன்பிடிப்பில் ஈடுபட்டவரை கடலோர போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து 46 டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆசிரியரின் தேர்வுகள்...