பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன


பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன
x
தினத்தந்தி 24 Jan 2019 3:30 AM IST (Updated: 24 Jan 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன.

மும்பை,

மும்பை பைகுல்லாவில் ராணி உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மான்கள், குரங்குகள், முதலை, யானை, நீர்யானை மற்றும் பறவைகள் உள்ளன. தற்போது, பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்ட சீரமைப்பு பணிக்கு பின்னர் பூங்காவில் பென்குயின் பறவைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

இதன் காரணமாக பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் ரூ.5-ல் இருந்து அதிரடியாக ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது.

தற்போது, 2-ம் கட்ட சீரமைப்பு பணி நடந்து வருகிறது. பல்வேறு வனவிலங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு விடுவதற்காக பூங்காவில் அந்த விலங்குகளுக்கான பிரத்யேக உறைவிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன்படி ராணி பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக பிளக் பக் எனப்படும் கருப்பு மான், சிங்கம், புலி, ஓநாய், நரி, கழுதைப்புலி உள்ளிட்ட விலங்குகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கருப்பு மான், குஜராத்தின் ஜூனாகத்தில் இருந்து சிங்கம், சூரத்தில் இருந்து நரி, அவுரங்காபாத்தில் இருந்து புலி, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஓநாய், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கழுதைப்புலி கொண்டு வரப்படுகின்றன.

இதற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.

மேற்கண்ட வனவிலங்குகளில் சில அடுத்த மாதமே ரெயில் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story