திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் 2-வதுநாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு


திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் 2-வதுநாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Jan 2019 11:00 PM GMT (Updated: 24 Jan 2019 6:58 PM GMT)

திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் 2-வதுநாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 625 கோவில்களுக்கு சொந்தமான 4,359 சிலைகள் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் தொன்மை தன்மையை கண்டறிவது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 2 கட்டங்களாக ஆய்வு செய்தனர். இதில் 618 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 3-வது கட்டமாக சிலைகளை ஆய்வு செய்யும் பணி நேற்றுமுன் தினம் தொடங்கியது. இதை யடுத்து நேற்று 2-வதுநாளாக திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் இணைந்து சாமி சிலைகளின் உண்மை தன்மையும், தொன்மை, பழமை நிலை குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில், தொல்லியதுறை ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை 829 சிலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வு நாளை (இன்று) வரை நடைபெறும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். 

Next Story