ரஷியா அருகே கப்பலில் தீ விபத்து: மதுக்கூர் என்ஜினீயரின் கதி என்ன? சோகத்தில் கிராம மக்கள்
ரஷியா அருகே தீ விபத்துக்குள்ளான கப்பலில் மரைன் என்ஜினீயராக வேலை பார்த்த மதுக்கூரை சேர்ந்தவரின் கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இதனால் அவருடைய கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
மதுக்கூர்,
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு ஊராட்சியை சேர்ந்தவர் ஆனந்த சேகர். இவர், ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் அவினாஸ்(வயது 23). மரைன் என்ஜினீயர்.
இவர் கடந்த ஆண்டு(2018) டிசம்பர் மாதம் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பலில் வேலைக்கு சேர்ந்தார். சம்பவத்தன்று அந்த கப்பல் துருக்கி நாட்டில் இருந்து ரஷியா நோக்கி சென்று கொண்டிருந்தது.
ரஷியா அருகே உள்ள ஒரு தீவு அருகே மற்றொரு கப்பலுக்கு எரிபொருளை பரிமாற்றம் செய்யும்போது தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவினாஸ் சென்ற கப்பலும், மற்றொரு கப்பலும் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்தில் பலர் இறந்து விட்டனர். ஆனால் அவினாசின் கதி என்ன? என்பது பற்றி தெரியவில்லை. அவர் பற்றிய எந்த தகவலும் அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
என்ஜினீயராக வேலை பார்த்த மதுக்கூரை சேர்ந்த அவினாஸ் சென்ற கப்பல் தீ விபத்துக்குள்ளாகி இருப்பதும், அவருடைய கதி என்ன? என்பது பற்றி தகவல் கிடைக்காததாலும் மதுக்கூர் வடக்கு ஊராட்சி பகுதி கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

Related Tags :
Next Story