பைபர் படகுகளின் என்ஜின்கள்-மீன்பிடி வலைகள் சேதம்: இருதரப்பினர் இடையே மோதல்; 15 பேர் காயம் 4 பேர் கைது


பைபர் படகுகளின் என்ஜின்கள்-மீன்பிடி வலைகள் சேதம்: இருதரப்பினர் இடையே மோதல்; 15 பேர் காயம் 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 3:45 AM IST (Updated: 25 Jan 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

பைபர் படகுகளின் என்ஜின்கள் மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு 15 ே- பர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே நாயக்கர்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கடற்கரையோரம் மீனவர்கள் நிறுத்தி வைத்து இருந்த 10-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் இருக்கும் என்ஜின்கள் மற்றும் மீன்பிடி வலைகளை சிலர் சேதப்படுத்தி வருவதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளின் என்ஜின்கள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் படகுகளின் என்ஜின்கள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியது தொடர்பாக நாயக்கர்குப்பத்தை சேர்ந்த இருதரப்பினர் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த 15 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் வீரமணி (40), விஜய்கேது (35), செல்வம் (32), சுந்தரபாண்டியன் (36) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக 16 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story