கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொலை வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே 3 பேர் கொலை வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ம.பொ.சி. நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 17). பாலிடெக்னிக் மாணவர். இவருடைய நண்பர்கள் கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவை சேர்ந்த விமல்(21), சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ்(26). இவர்கள் 3 பேரும் கடந்த 19-ந்தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) துரைராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சம்பவ இடத்தில் செல்போன் சிக்னல், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு, ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஷாஜகான் (28) என்ற வியாபாரி கொலை தொடர்பான முன்விரோதம் மற்றும் கஞ்சா தொடர்பான பிரச்சினை என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ஷாஜகான் கொலையில் தற்போது படுகொலை செய்யப்பட்ட விமலும், சதீசும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மேற்கண்ட படுகொலைகள் தொடர்பாக புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி நடராஜ் (26), பாஸ்கர் (32), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் (24), சித்தராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (25) மற்றும் ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன்(23), கோபி (26) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கடந்த ஆண்டு ஷாஜகான் கொலையின்போது சிறைக்கு சென்ற சதீசுக்கும், விமலுக்கும் சிறையில் இருந்த புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த கஞ்சா கோஷ்டியினர் சிலருடன் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு கொலை செய்ததால் உள்ளூரில் நாங்கள்தான் எல்லாமே என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கும் கஞ்சா கோஷ்டியினருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததது.
சென்னையில் இருந்து வந்து சேர்ந்த விமலும், சதீசும் தங்களிடம் பிரச்சினை செய்வதையும், மாமூல் கேட்பதையும் உள்ளூர் கஞ்சா கோஷ்டியினர் விரும்பவில்லை. மேலும் ஷாஜகான் கொலை செய்யப்பட்டதில் இருந்து அவரது தரப்பை சேர்ந்த உறவினர்களும் மேற்கண்ட 2 பேர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இதுதவிர கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சதீஷ், விமல் மற்றும் அவர்களது நண்பரான கல்லூரி மாணவர் ஆகாஷ் ஆகியோர் சேர்ந்து கொண்டு 2 முறை கஞ்சா கோஷ்டியினரிடம் மோதலில் ஈடுபட்டு அவர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கஞ்சா கோஷ்டியினர் மற்றும் ஷாஜகான் தரப்பினர் என 2 தரப்பினரும் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்டு மேற்கண்ட விமல், சதீஷ்,் கல்லூரி மாணவர் ஆகாஷ் ஆகியோரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஷாஜகானின் உறவினர்களான மீஞ்சூரை சேர்ந்த முகமது அசேன்(36), வியாசர்பாடியை சேர்ந்த நாகூர் உசேன் (26) ஆகியோர் கடந்த 22-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் தற்போது கைதாகி உள்ள 8 பேர்களை தவிர நடராஜின் நண்பரான ஜெகன் மற்றும் ஷாஜகானின் உறவினர்களான நாகூர் மீரான், சையத் இப்ராகீம் ஆகியயோரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story