தனித்தனி சம்பவத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை


தனித்தனி சம்பவத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Jan 2019 3:45 AM IST (Updated: 25 Jan 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி சம்பவத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

வில்லியனூர், 

வில்லியனூர் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன், பிளம்பர். இவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காயத்திரி அவதிப்பட்டு வந்தார். இதற்கு டாக்டர்களிடம் சிகிச்சைப்பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கிக்கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி காயத்திரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான 4 ஆண்டுகளில் காயத்திரி இறந்ததால் தாசில்தார் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி கண்ணதாசன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56), டெய்லர். இவருக்கு அஞ்சலாட்சி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆறுமுகம், வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story