குடியரசு தின விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் லாட்ஜ், ரெயில் நிலையத்தில் சோதனை
குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லாட்ஜ், ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவையில் குடியரசு தினவிழா நாளை(சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக உப்பளம் மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குடியரசு தின விழாவை முன்னிட்டு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் கிழக்குப்பதிவு போலீஸ் சூப்பிரண்டு மாறன், ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். மேலும் நகரில் போலீசார் தங்கள் எல்லைக்கு உள்பட்ட லாட்ஜுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது தங்கி உள்ளனரா? என்று சோதனை நடத்தினர்.
இதே போல் நகரின் எல்லைகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தினர். புதுவை மேட்டுப்பாளையம் குரும்பாபேட்டில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story