மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஜம்புமடை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 42). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஒரு பள்ளி மாணவியை வாய்க்கால் கரைக்கு தூக்கி சென்று கடந்த 15-7-2017 அன்று பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த மாணவி பால்ராஜின் கைவிரலை கடித்து விட்டு தப்பிவிட்டார்.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தா.பேட்டை போலீசார், பால்ராஜ் மீது பாலியல் வன்முறையில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பால்ராஜை கைது செய்த போலீசார் திருச்சி மகளிர் கோர்ட்டில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். போலீசார் தரப்பில் இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பால்ராஜுக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜி.மகிழேந்தி தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story