திருச்சி விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பேரிடம் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 25 Jan 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கணேசன் என்ற பயணியிடம் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் 190 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

திருச்சி,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை தனியார் விமானம் ஒன்று திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கணேசன் என்ற பயணியிடம் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் 190 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 15 ஆயிரம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, துபாயில் இருந்து நேற்று பகல் திருச்சிக்கு மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த பெரோஸ் என்பவர், தான் அணிந்து இருந்த ஜீன்ஸ்பேண்ட்டில் மறைத்து 540 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story