மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2019 4:30 AM IST (Updated: 25 Jan 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 மாதங்களுக்கு பிறகு உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அழகாபுரி வீதியில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி உள்ளது. இங்கு ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் மறைவான இடம் உள்ளது. அங்குள்ள ஒரு அரச மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்குவதாக நேற்று முன்தினம் மாலை மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மரத்தின் மேலே எலும்புகள் மீது தோல் மட்டும் அழுகிய நிலையில் உடல் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் இரவு நேரமாகி விட்டதால், உடலை மீட்பது சிரமமானது.இந்த நிலையில் மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து காணாமல் போன நபர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வந்தனர். இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு மரத்தில் தொங்கி கொண்டிருந்த உடலை மீட்டனர். சட்டையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஒரு செல்போன் எண் இருந்தது.

இதை தொடர்ந்து செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் ஜமீன் முத்தூரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன் (வயது 35) என்பது தெரியவந்தது. இவரது மனைவி பிரிந்து சென்று விட்ட ஏக்கத்தில் இருந்து ள்ளார். மேலும் அவர் கடந்த 2 மாதத்துக்கு முன் காணாமல் போனதும் தெரியவந்தது.

இந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து 2 மாதங்கள் வரை இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மாதங்களாக குடியிருப்பு பகுதியில் மரத்தில் பிணம் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story