தொழிலாளியை வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


தொழிலாளியை வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 3:00 AM IST (Updated: 26 Jan 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

தொழிலாளி

தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் சவுந்தரராஜன் என்ற சவுந்தர் (வயது 25), உப்பள தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதலித்தார். தொடர்ந்து அவரை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டார். ஆனால் மகாலட்சுமியின் பெற்றோர் மறுத்து விட்டனர். மகாலட்சுமிக்கும், கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மகாலட்சுமிக்கும், கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மகாலட்சுமி சத்யாநகரில் உள்ள தனது அண்ணன் அய்யனார் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் சவுந்தரராஜன் மீண்டும் தனது காதலை புதுப்பிக்க தொடங்கினார். இதை அறிந்த அய்யனாரின் மகன் சுடலைமணி, சவுந்தரராஜனை கண்டித்தார். ஆனால் சவுந்தரராஜன் கேட்காமல் அடிக்கடி அவர் வீட்டின் முன்பு வந்து நின்று உள்ளார்.

வெட்டிக் கொலை

இதனால் சுடலைமணி, சவுந்தரராஜனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 19-1-2014 அன்று இரவு மகாலட்சுமி வீட்டின் அருகே சவுந்தரராஜன் வந்தார்.

அப்போது அங்கு வந்த சுடலைமணி, தனது நண்பர்கள் சத்யாநகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் முத்துமாரியப்பன் என்ற இம்மானுவேல்(20), அவரது அண்ணன் சத்தியராஜ் என்ற அந்தோணி (23) ஆகியோருடன் சேர்ந்து, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட சுடலைமணி மற்றும் அண்ணன்-தம்பியான முத்துமாரியப்பன், சத்தியராஜ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி மணிகண்டன் ஆஜர் ஆனார்.

Next Story