குளித்தலை-அரவக்குறிச்சியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


குளித்தலை-அரவக்குறிச்சியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:00 AM IST (Updated: 26 Jan 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை, அரவக்குறிச்சியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

குளித்தலை, 

குளித்தலையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் பழைய கரூர் - திருச்சி தேசியநெடுஞ்சாலை வழியாக குளித்தலை சுங்ககேட்வரை சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மாவட்ட கல்வி அதிகாரி கபீர், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல அரவக்குறிச்சியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தொடங்கி வைத்தார். தாசில்தார் (பொறுப்பு) அமுதா முன்னிலை வகித்தார். ஊர்வலம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் தனி துணை தாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் சாகுல் அமீது, மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story