திருமானூர் அருகே ஆசிரியர்களை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
திருமானூர் அருகே ஆசிரியர்களை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 25 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 4 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பள்ளியின் முன்பு ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட சென்ற ஆசிரியர்களை கண்டித்தும், அவர்களின் பணி ஆணையை ரத்து செய்யக்கோரியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தற்போது பொதுதேர்வு நெருங்கி வரும் நேரத்தில் ஆசிரியர்கள் பொறுப்பின்றி போராட்டத்தில் ஈடுபட சென்றால் எங்கள் குழந்தைகளின் கல்வி என்ன ஆவது. எங்களின் குழந்தைகள் தினமும் பள்ளி சென்று திரும்பி வந்து இன்றும் எந்த ஆசிரியர்களும் வரவில்லை சும்மாவே அமர்ந்துவிட்டு திரும்பி வருகிறோம் எனக்கூறுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க தமிழகத்தில் பல லட்சம் வேலையில்லா பட்டதாரிகள் இருக் கிறார்கள். ஆகையால் இது போன்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story