திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த தகவல் பெற மாவட்ட தொடர்பு மையம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் குறித்த தகவல் பெறும் மாவட்ட தொடர்பு மையத்தை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கிவைத்தார்.
திருப்பூர்,
தேசிய வாக்காளர் தினம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையே ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் பங்கேற்ற கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட போஸ்டர்கள், ஓவியங்கள், குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதில் உடுமலையில் உள்ள ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகளால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படம் மாநில அளவில் 2-ம் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நேற்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அதிகாரியால் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இந்த போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் வாக்காளர்கள், தேர்தல் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றை தெரிவிப்பதற்காகவும் தொலைபேசி சேவைக்கான வாக்காளர் உதவி எண் 1950 செயல்படும் மாவட்ட தொடர்பு மையத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
இந்த தொலைபேசி எண்ணை வாக்காளர்கள் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற முடியும். இந்த மையம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படுகிறது. மேலும் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
முன்னதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமையில் திருப்பூர் சப்-கலெக் டர் ஷ்ரவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாதனைக்குறள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story