செஞ்சி அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி குடும்பம் நடத்தியதால் விரக்தி


செஞ்சி அருகே தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை கள்ளக்காதலனுடன் மனைவி குடும்பம் நடத்தியதால் விரக்தி
x
தினத்தந்தி 27 Jan 2019 4:00 AM IST (Updated: 26 Jan 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கள்ளக்காதலனுடன் மனைவி குடும்பம் நடத்தியதால் விரக்தியடைந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி, 

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

செஞ்சியை அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள பனமலை உமையாள்புரத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 38). கொத்தனார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கோமதிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இது பற்றி அறிந்ததும் குணசேகரன், தனது மனைவியை கண்டித்தார். இதனால் கோமதி, தனது கணவருடன் தகராறு செய்தார். மேலும் அவர், குணசேகரனை விட்டு பிரிந்து, கள்ளக்காதலனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தினார்.

இதனிடையே குணசேகரனின் ஒரு மகளுக்கு திருமணம் நடந்தது. மற்றொரு மகள், அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். எனவே குணசேகரன், சென்னையில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது கள்ளக்காதலனுடன் கோமதி, வாழ்ந்ததை கண்டு விரக்தியடைந்த குணசேகரன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story