தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில் 313 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினர்


தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில் 313 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினர்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 26 Jan 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில் 313 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா நேற்று நடந்தது. விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரனுடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டதுடன், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை, சுதந்திரபோராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து அவர், அரசின் பல்வேறு துறை சார்பில் 313 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 61 லட்சத்து 45 ஆயிரத்து 990 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய 92 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களையும் கலெக்டர் வழங்கி கவுரவித்தார். விழாவில் பங்கேற்ற அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுன்கார, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ்(தஞ்சை), வீராச்சாமி(கும்பகோணம்), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தா மற்றும் அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story