காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் கொடியேற்றினார்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் கொடியேற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:15 PM GMT (Updated: 26 Jan 2019 6:53 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் பா.பொன்னையா கொடியேற்றிவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 159 பயனாளிகளுக்கு ரூ.35.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையில் அண்ணா பதக்கம் பெற்றவர்களை பாராட்டி பதக்கங்களும், சிறப்பாக பணியாற்றிய 62 போலீஸ்காரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கத்தையும் வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை இயக்குநர்கள் உட்பட 40 அரசுத்துறை உயர் அலுவலர்களுக்கும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 53 அரசு பணியாளர்களுக்கும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 50 காவலர்களுக்கும், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக பணி முடித்த 53 பணியாளர்களுக்கும், சிறப்பாக கொடிநாள் வசூல் செய்த 7 அரசுத்துறை அலுவலர்களுக்கும் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 கல்வி மாவட்டங்களில் பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாமல் இருந்த 20 பள்ளிகளுக்கு பசுமை விருதுகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து, கலை, கிரிக்கெட், நீச்சல் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய 4 விளையாட்டு வீரர்களுக்கும், மற்றும் பரதநாட்டியத்தில் சிறந்த விளங்கிய ஒருவருக்கும் பாராட்டி, கேடயங்கள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் ஆர்்.பெருமாள் ராஜா, நகராட்சி ஆணையர் பொறுப்பு மகேந்திரன், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் காஞ்சீபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மண்டல இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். விழாவில் துணைப்பதிவாளர்கள் சங்கர், வேணு, உமாபதி, கண்காணிப்பாளர்கள் காத்தவராயன், சீனிவாசன், அமுதா, பாலாஜி, சவமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் கோதண்டராமன், மேலாளர் முரளி உள்பட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த குடியரசு தின விழாவில் மேலாண்மை இயக்குநரும், இணைப்பதிவாளருமான பா.ஜெய்ஸ்ரீ தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பொது மேலாளர் அதியமான் இனிப்புகள் வழங்கினார். விழாவில் உதவி பொது மேலாளர்கள் நாராயணன், ராஜேந்திரன், ரமாதேவி, தீனதயாளன், கண்காணிப்பாளர் சரவணன், அண்ணா தொழிற்சங்க சிறப்பு தலைவர் குணா உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம், நகராட்சியில் நடந்த குடியரசு தின விழாவில் நகராட்சி ஆணையர் பொறுப்பு மகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். காஞ்சீபுரம் அருகே வாலாஜாபாத் அகத்தியா மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி, பள்ளியில் தேசிய கொடியை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் என்.ஜி.ஓ தலைவர் த.அஜய்குமார் கலந்து கொண்டார். காஞ்சீபுரத்தில் உள்ள சோழன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் தொ.சஞ்சீவிஜெயராம் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

காஞ்சீபுரம் காந்திரோட்டில் பச்சையப்பாஸ் சில்க்ஸ் அதிபர்கள் சுந்தர்கணேஷ், பச்சையப்பன் என்கிற பிரபு, ஆகியோர் தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்கள்.

காஞ்சீபுரம் சப்பாணி பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள காஞ்சீபுரம் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது. சங்கத்தின் தலைவர் ஜி.சம்பந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, கூட்டுறவு துறையினருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் இருங்காட்டுகோட்டை, தண்டலம், காட்டரம்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளில் மூவர்ண தேசிய கொடியேற்றி, மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காட்டரம்பாக்கம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் வசந்தா தலைமையில் நடந்த விழாவில் சமூக சேவகர் ஜானகிராமன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரூராட்சியில் செயல் அலுவலர் பிரேமா தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா.சீனிவாசன் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் கொடியேற்றினார். இதில் மண்டல துணை தாசில்தார் பூபாலன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டில் மாவட்ட நீதிபதி வசந்தலீலா தேசிய கொடியேற்றினார். பார் சங்க தலைவர் சொக்கலிங்கம் இனிப்பு வழங்கினார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் முத்துவடிவேல் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில். வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தனது அலுவலகத்தில் தேசியகொடியேற்றி இனிப்பு வழங்கினார். சிங்கப்பெருமாள்கோயிலில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கே.பால் கொடியேற்றினார்். அஞ்சூர் எஸ்.வி.மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தாளாளர் ராஜேந்திரன் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். சவுத் இன்டியன் பாரா மெடிக்கல் இன்ஸ்டியுட்டில் கல்லுாரி முதல்வர் ஆரோன் அற்புதராஜ் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சந்திரபாபு கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் இருந்தார். இதேபோல் கரசங்கல் ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியகொடியை ஊராட்சி செயலர் நாசர், கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். ஆதனூர் ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு விழாவில் ஊராட்சி செயலர் இதயராஜ் தேசியகொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். இதேபோல் மற்ற ஊராட்சிகளிலும் தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் செயல் அலுவலர் வி.ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். அலுவலக மேலாளர் ஆர்.சக்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பி.டி.ஓ பி.சார்லஸ் சசிகுமார், ஒன்றிய மேலாளர்கள் கணேசன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்ட மின்பொறியாளர்அலுவலகத்தில் நிர்வாக மின் பொறியாளர் ஆர்.மனோகரன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். மின்வாரிய அலுவலகத்தில் ஆர்.கார்த்திகேயன் கொடி ஏற்றினார். அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லோ.சுரேந்திரகுமார், மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஜெயராமன், ஒரத்தி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.சதாசிவம் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 59 ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலாளர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

Next Story