வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் கைது: ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட 15 பேர் சிறையில் அடைப்பு


வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நள்ளிரவில் கைது: ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட 15 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 27 Jan 2019 3:45 AM IST (Updated: 27 Jan 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட 15 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டது. எனினும், தொடர்ந்து வேலைநிறுத்தம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அதிடியாக கைது செய்யப்பட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய, விடிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் வீட்டில் இருந்தவர்கள், விடுதியில் தங்கியவர்கள் மட்டுமின்றி பஸ்சில் சென்றவர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ஜேம்ஸ் உள்பட மாவட்டம் முழுவதும் 15 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மேலும் சில முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story