நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் கே.வி.தங்கபாலு பேச்சு
சேலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சேலம்,
சேலம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து நடந்த சக்தி திட்டம் தொடக்க விழாவுக்கு அவர் தலைமை தாங்கினார். அப்போது கே.வி.தங்கபாலு பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்காவின் வருகை என்பது தொண்டர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார். மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார். தொண்டர்கள் அனைவரும் சக்தி திட்டத்தில் இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.