திருப்பூரில் மதுவிற்ற 10 பேர் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 2-வது ரெயில்வே கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கணேசன்(வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனுப்பர்பாளையம் பிரிவு, கூலிபாளையம் போயர் காலனி, அணைப்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மறைவிடங்களில் வைத்தும், பழகுடோன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் வைத்தும் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த திருப்பூர் கோழிபண்ணை பகுதியை சேர்ந்த செல்வம்(27), சதீஸ்(23), பசுபதி(24), கார்த்திக்(20) மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், திருப்பூர் கொங்கணகிரிகோவில் தெருவை சேர்ந்த தங்கராஜ்(34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுவிலக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு பாறைக்குழி, முருகம்பாளையம், கோவில் வழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மதியழகன்(32), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரகு(24), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 76 மதுபாட்டில்களையும், ரூ.2 ஆயிரத்து 390-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story