சென்டிரல் ரெயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா கொண்டு வந்த ஆந்திராவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னையில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான பயணிகளிடம் உள்ள உடைமைகளை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ராமேசுவரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை 9-ல் வந்தது.
இதையடுத்து பயணிகள் சிலர் ரெயிலில் இருந்து இறங்கி வெளியே சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் வருவதை இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் கவனித்தார். இதைத்தொடர்ந்து அவர்களிடம் சென்று விசாரித்தார். அப்போது அவர்கள் ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணா(வயது 44) மற்றும் மகேஷ் பிரதாவ்(40) என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் அவர்களது பைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 9 பொட்டலங்களில் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் இருவரையும் கைது செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story