சேலத்திற்கு நாளை மு.க.ஸ்டாலின் வருகை தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது


சேலத்திற்கு நாளை மு.க.ஸ்டாலின் வருகை தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 28 Jan 2019 2:45 AM IST (Updated: 28 Jan 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

சேலத்திற்கு நாளை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சேலம், 

சேலத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நேற்று புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமை தாங்கினார். பொருளாளர் சுபாஷ், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைகண்ணன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.

இந்த கூட்டத்தில் துணை செயலாளர்கள் கணேசன், கந்தசாமி, லலிதா சுந்தர்ராஜன், மாநகர அவைத்தலைவர் முருகன், பகுதி செயலாளர்கள் சரவணன், சாந்தமூர்த்தி, ராமச்சந்திரன், பிரகாஷ், தனசேகர், ஜெய், நிர்வாகி பச்சையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதன்பிறகு அவர் தர்மபுரியில் இருந்து தொப்பூர் வழியாக சேலம் வருகிறார். அன்றைய தினம் மாலை 5.30் மணிக்கு சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தலைமைக்கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரநிதிகள், சேலம் மாநகரத்தின் பகுதியில் உள்ள கோட்ட நிர்வாகிகள், ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, விவசாய அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, வக்கீல் அணி, மருத்துவர் அணி, விவசாய தொழிலாளர் அணி உள்பட அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story