தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் பள்ளிக்கூடங்களில் குவிந்தனர்


தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பெண்கள் ஆர்வம் பள்ளிக்கூடங்களில் குவிந்தனர்
x
தினத்தந்தி 28 Jan 2019 3:00 AM IST (Updated: 28 Jan 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பெண்கள் பள்ளிக்கூடங்களில் குவிந்தனர்.

நெல்லை, 

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பெண்கள் பள்ளிக்கூடங்களில் குவிந்தனர்.

வேலைநிறுத்தம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3,636 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பிச்சைக்கனி, வேம்பு, மணிமாறன், பாபுசெல்வன், பால்ராஜ், ஜான்பாரதி தாசன், ராஜேந்திரன், செய்யது இப்புராகிம் மூசா, முருகராஜ் ஆகிய 9 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவு பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று அனுப்பப்பட்டது.

தற்காலிக ஆசிரியர்கள்

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தந்த பள்ளிக்கூடங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் கொடுக்கலாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து விடுமுறை நாளான நேற்றும் பல பள்ளிக்கூடங்களில் பெண்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். அங்கு அவர்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் கொடுத்தனர்.

Next Story