பள்ளிகளில் வாழ்க்கை பாடத்தையும் கற்பிக்க வேண்டியது அவசியம் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேச்சு


பள்ளிகளில் வாழ்க்கை பாடத்தையும் கற்பிக்க வேண்டியது அவசியம் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேச்சு
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் வாழ்க்கை பாடத்தையும் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

பள்ளிகளில் வாழ்க்கை பாடத்தையும் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

வாழ்க்கையின் மாண்புகள்

பெங்களூருவில் தனியார் பள்ளி கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு பேசியதாவது:-

முந்தைய காலத்தில் குருகுலம் இருந்தது. அங்கு வாழ்க்கையின் மாண்புகளை பாடங்களாக கற்றுக்கொடுத்தனர். இதனால் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையின் அனைத்து கடினமான தருணங்களையும் எதிர்கொண்டனர்.

பெரிய பிரச்சினை

ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகு இந்த குருகுல கல்வி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கல்வி கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த பள்ளிகள் பாடப்புத்தகங்களை கற்பிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருக்கின்றன.

இதனால் வாழ்க்கையில் பெரிய பிரச்சினை வரும்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் குழந்தை கள் கஷ்டப்படுகிறார்கள். பள்ளிகள், பாடப்புத்தகங்களை கற்பிப்பதுடன், வாழ்க்கை பாடத்தையும் கற்பிக்க வேண்டியது அவசியம்.

பிரதான மையமாக...

பெற்றோரும் குழந்தைகள் மீது, கல்வி சுமையை மட்டுமே சுமத்தாமல், வாழ்க்கையின் மாண்புகளை எடுத்துக்கூற வேண்டும். பெங்களூரு, கல்வியில் பிரதான மையமாக மாறி வருகிறது.

பெரிய நிறுவனங்கள், இங்கு தங்களின் கிளைகளை தொடங்கி இருக்கிறார்கள். வெளிமாநிலத்தவர், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கல்வி பயில, இங்கே வருகிறார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

Next Story