சோமரசம்பேட்டை அருகே ஊராட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி


சோமரசம்பேட்டை அருகே ஊராட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

சோமரசம்பேட்டை அருகே ஊராட்சி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி ‘வாட்ஸ்அப்பில்’ வைரலாக பரவிய படத்தால் பரபரப்பு.

சோமரசம்பேட்டை,

நாட்டின் குடியரசு தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகில் உள்ள அதவத்தூர் ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் தர்மலிங்கம் கொடியேற்றினார். அன்று காலை ஏற்றிய கொடியை மாலையில் இறக்காமல் விட்டு விட்டனர். இந்நிலையில் மர்மநபர்கள், தேசியகொடியை அரைக்கம்பத்தில் தலைகீழாக கட்டிவிட்டு சென்று விட்டனர். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், தேசிய கொடி அரைக்கம்பத்தில் தலைகீழாக பறப்பதை செல்போனில் படம் பிடித்தனர். அந்த படம் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதனை அறிந்த, அதவத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர், உடனடியாக கொடியை இறக்கி எடுத்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story