பம்பாய் நாடார் சங்க முப்பெரும் விழா பாண்டுப்பில் நடந்தது


பம்பாய் நாடார் சங்க முப்பெரும் விழா பாண்டுப்பில் நடந்தது
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

பம்பாய் நாடார் சங்க முப்பெரும் விழா பாண்டுப்பில் நடந்தது.

மும்பை, 

பம்பாய் நாடார் சங்க முப்பெரும் விழா பாண்டுப்பில் நடந்தது.

முப்பெரும் விழா

மும்பை பாண்டுப் மேற்கில் உள்ள பிரைட் உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை பம்பாய் நாடார் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா, காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் ராஜா இளங்கோ தலைமை தாங்கினார்.

செயலாளர் கோபால் ராஜா வரவேற்று பேசினார். துணைத் தலைவர் சின்னத்துரை விழாவை தொடங்கி வைத்தார்.

முதன்மை அழைப்பாளராக எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். விழாவில் தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ் நாடார், தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை சேர்மன் ராமராஜா நாடார் உள்பட பலர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., ஆர்.கே.காளிதாஸ் நாடாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் நடிகை ஆர்த்தி, நடிகர் கணேஷ் ஆகியோரின் நகைச்சுவையான பேச்சு விழாவிற்கு வந்திருந்தவர்களை கவர்ந்தது. முடிவில் துணை செயலாளர் பேலஸ்துரை நன்றி கூறினார். இதில் தெட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், துணைத் தலைவர் முருகேச பாண்டியன் நாடார், துணைச் செயலாளர் ரெத்தினராஜ் நாடார், இயக்குனர்கள் ராமர் நாடார், தங்கவேல் நாடார், காமராஜ் நாடார், மும்பை கிளை செயலாளர் காசிலிங்கம் நாடார், உதவி சேர்மன் ரெம்ஜிஸ் நாடார்.

மராட்டிய மாநில தமிழ்ச்சங்க தலைவர் அண்ணாமலை, ஆ.பி.சுரேஷ், மா.கருண், ராஜ்குமார், லிங்கதுரை நாடார், செந்தூர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story