நாகர்கோவிலில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் 25 பேர் கைது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், ரெயில்வே உள்ளிட்ட அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும், அரசு பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை 56–ஐ வாபஸ் வாங்க வேண்டும், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், துணை தலைவர் பிரவீன், துணை செயலாளர் காஸ்ட்ரோ உள்பட பலர் கலந்து கொண்டு, கலெக்டர் அலுவலகம் முன்புறமுள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story