நாகை, மலையீஸ்வரன் கோவில் கருவறையில் தீ விபத்து பூஜை பொருட்கள்-கதவுகள் எரிந்து நாசமானதால் பக்தர்கள் வேதனை
நாகையில், மலையீஸ்வரன் கோவிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுவாமி கருவறையில் ஏற்பட்ட தீவிபத்தில் பூஜை பொருட்கள், கதவுகள் எரிந்து நாசமானதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினத்தில் கோச்செங்கட்சோழரால் கட்டப்பட்ட மலையீஸ்வரன் கோவில்(மாடக்கோவில்) உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவிலில் நேற்று மதியம் பூஜைகள் முடிந்ததும் குருக்கள் ராஜுவும், காவலாளி கருப்பையனும் கோவிலில் இருந்து சென்று விட்டனர். அப்போது கோவிலின் பிரதான கதவை அவர்கள் மூடாமல் சென்று விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கோவிலில் உள்ள மூலவர் கைலாயநாதர் கருவறையில் மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த தீ மள மளவென பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்தில் கோவில் கருவறையில் இருந்த முதன்மை கதவு மற்றும் பூஜை பொருட்கள் எரிந்து நாசமாயின. அப்போது அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், கோவில் கருவறையில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அங்கு ஓடி வந்து அங்கு உள்ள கிணற்று நீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் இந்த செயலால் பெரும் தீவிபத்து உடனடியாக தவிர்க்கப்பட்டது.
திறந்திருந்த கோவிலின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் யாரேனும் சதி வேலையில் ஈடுபட்டார்களா? அல்லது பக்தர்கள் ஏற்றி வைத்த விளக்கில் இருந்து தீப்பற்றியதா? என்ற கோணத்தில் நாகை டவுன் போலீசாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவிலில், சாமி கருவறையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் நாகையில் பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story