ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு


ஆசை வார்த்தைகள் கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். காசிமேடு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி, அதன்பிறகு மாயமானார்.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி அவரது பெற்றோர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையில் மாயமான மாணவி, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். விசாரணையில், காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவை சேர்ந்த திலேத் (வயது 23) என்ற வாலிபர் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று, ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், திலேத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story