கிருஷ்ணகிரி வந்த மு.க.ஸ்டாலினுக்கு, கொட்டும் மழையில் தொண்டர்கள் வரவேற்பு


கிருஷ்ணகிரி வந்த மு.க.ஸ்டாலினுக்கு, கொட்டும் மழையில் தொண்டர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:45 AM IST (Updated: 29 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரிக்கு நேற்று இரவு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிருஷ்ணகிரி, 

தி.மு.க.தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று மாலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு இரவு 9.10 மணிக்கு மு.க.ஸ்டாலின் வந்த போது பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., வேப்பனப்பள்ளி பி.முருகன் எம்.எல்.ஏ., தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் அன்பரசன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு கிருஷ்ணகிரியில் தங்கிய மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

Next Story