சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோ சார்பில் மறியல் போராட்டம் 870 பெண்கள் உள்பட 1,555 பேர் கைது


சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோ சார்பில் மறியல் போராட்டம் 870 பெண்கள் உள்பட 1,555 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2019 3:45 AM IST (Updated: 29 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் சிவகங்கையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்870 பெண்கள் உள்பட 1,555 பேர் கைது செய்யப்பட்டனர்

சிவகங்கை,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22–ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, உயர்கல்வி துறை, நகர் நிர்வாகதுறை, அங்கன்வாடி, சத்துணவு, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையொட்டி நேற்றும் சிவகங்கையில் மறில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அன்பரசு, பிரபாகர் முத்துக்குமார், சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், ரவிச்சந்திரன், ஜோசப் சேவியர், முத்துப்பாண்டியன், நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில் போராட்டத்தில் ஈடுபட்ட 870 பெண்கள் உள்பட 1,555 பேர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்கலேஸ்வரன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்

இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட துணை செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், சிவகங்கை நகரசபை முன்னாள் தலைவர் அர்ச்சுனன் உள்பட அந்த கட்சியினர் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி தலைமையில் அந்த அமைப்பினரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

நேற்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரி மாணவ–மாணவிகள் ஜாக்டோ–ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து, போராட்டம் நடைபெற்ற அரண்மனை வாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு அவர்களை போலீசார் தடுத்த நிறத்தியதை தொடர்ந்து, அவர்கள் தரையில் அமர்ந்து கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story