வீட்டு வரி ரசீது கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


வீட்டு வரி ரசீது கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:00 AM IST (Updated: 29 Jan 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திடீரென வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் ஊராட்சி மரவநத்தம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் கொட்டகை மற்றும் வீடுகள் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் பிம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று வீட்டு வரி ரசீது கேட்டபோது, வீட்டு வரி ரசீது வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திடீரென வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் வீட்டு வரி ரசீது வழங்கப்படும் என கூறினர். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story