குளித்தலை கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு


குளித்தலை கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 29 Jan 2019 4:00 AM IST (Updated: 29 Jan 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை காவிரிநகரில் பழமையான கிளை நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

குளித்தலை,

குளித்தலை காவிரிநகரில் பழமையான கிளை நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு போதி அளவில் இடவசதி இல்லாததால் நூல்களை எடுத்து படிப்பதற்கு சிரமமாக உள்ளதாக அப்பகுதி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள், இளைஞர்கள் நலன்கருதி நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் குளித்தலை கிளை நூலகருக்கும், வாசகர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story