ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மறியல் போராட்டம் 1,800 பேர் கைது
திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 1,800 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மறியல் செய்வதற்காக வந்து குவிந்தனர்.
ஆசிரியைகள் மரத்தடி நிழலிலும், சாலையிலும் அமர்ந்து இருந்தனர். பழைய கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் பாதையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திரண்டு நின்றதால் மனு கொடுக்க வந்தவர்கள் உள்பட பொதுமக்கள் யாரும் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அங்கு திரண்டு நின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், பொன்.செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள். அவர்கள் பேசுகையில் ‘9 அம்ச கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கோரிக்கைகளை கூட நிறைவேற்றுவோம் என கூற தமிழக அரசின் பள்ளி கல்வி துறை முன்வரவில்லை. இதேபோன்று கல்வி துறை அமைச்சரை நாங்கள் இதுவரை பார்க்கவில்லை. கோரிக்கைகள் தொடர்பாக அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இல்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும்’ என்றார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன், மணிமாறன், குமாரவேல் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 1,100 பெண்கள் உள்பட 1,800 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அரசு டவுன் பஸ்களில் ஏற்றி செல்லப்பட்டு 7 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story