கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை,
அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ரெயில்வேயில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை தருவதை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் தெப்பக்குளம் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். போராட்டத்தை மாநில துணை செயலாளர் பாலசந்திரபோஸ் தொடங்கி வைத்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட தலைவர் சந்திர பிரகாஷ் உள்பட 57 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராபின்சன் தலைமையில் நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்து உத்தமர்கோவில் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story