மராட்டிய நகராட்சி தேர்தல் பா.ஜனதா 39 வார்டுகளில் வெற்றி காங்கிரசுக்கு 30 இடங்கள் கிடைத்தன
நகராட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி 39வார்டுகளைகைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியும் 30 இடங்களில் வெற்றி பெற்றது.
மும்பை,
ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த கர்ஜத், சத்தாராவின் மால்காபூர், அகமத்நகரின் கொண்டா, கட்சிரோலியின் அர்மோரி நகராட்சிகள் மற்றும் நாக்பூரை சேர்ந்த மஹாதுலா நகர பஞ்சாயத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின.
மொத்தம் 90 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சி 39 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 30 வார்டுகளையும், தேசியவாத காங்கிரஸ் 10 வார்டுகளையும், சிவசேனா 7 வார்டுகளையும் கைப்பற்றின. கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒரு வார்டை கைப்பற்றியது.
இடைத்தேர்தல்
இதன்மூலம் மஹாதுலா மற்றும் அர்மோரி நகராட்சி தலைவர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது. இதேபோல் காங்கிரஸ் கொண்டா, மால்காபூர் மாநகராட்சிகளையும், சிவசேனா கர்ஜத் நகராட்சியையும் கைப்பற்றியது.
மேலும் 5 உள்ளாட்சி அமைப்புகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாகின. இதன்படி சோலாப்பூர் மாவட்டம் துத்னியில் காங்கிரஸ் கட்சியும், புனே அலாந்தியை பா.ஜனதாவும், பீட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், கோண்டிய அர்ஜூனியை சிவசேனாவும் கைப்பற்றின. நாசிக் திந்தோரியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story