வேலைவாய்ப்பு செய்திகள் : ராணுவத்தில் சட்டம் படித்தவர்கள் சேரலாம்
ராணுவத்தில் ‘ஜேக் என்ட்ரி ஸ்கீம் (JAG 23-வது பேட்ஜ்) என்ற பயிற்சி சேர்க்கையின்படி சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போதைய 23-வது சேர்க்கையில் 7 ஆண்களும், 7 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள்.
இதில் சேர விரும்பபுபவர்கள் 1-7-2019 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எல்.எல்.பி. சட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் https://joinindianarmy.nic.in என்ற இணைய தளம் வழியாக 14-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Related Tags :
Next Story