வேளாண் தொழில் மேலாண்மை டிப்ளமோ படிப்பு : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்புகள் மிகுந்த வேளாண் தொழில்கள் படிப்பு என்பதைப் பற்றி இதே பகுதியில் சிறிது காலத்திற்கு முன்பு விரிவாக பார்த்தோம்.
கோவை வேளாண் கல்லூரி மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும், வேளாண் கல்வி மையங்களிலும் இது சார்ந்த பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் இருப்பதை அறிந்தோம்.
தற்போது மத்திய அரசின் வேளாண் கல்வி நிறுவனங்களில் ஒன்றான, தேசிய வேளாண் விற்பனை மையம் (niam) வேளாண் விற்பனை மேலாண்மை முதுநிலை படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவித்துள்ளது. இதை படிப்பவர்கள் சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராக உருவெடுக்கலாம்.
மத்திய அரசின் வேளாண் துறையின் கீழ் செயல்படும் என்.ஐ.ஏ.எம். கல்வி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இயங்குகிறது. தற்போது இங்கு அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
வேளாண்மை துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவா்கள் இந்த முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர முடியும். எஸ்.சி., எஸ்.டி. பிாிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண்ணில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
மத்திய அரசின் ‘கேட்’ அல்லது ‘சிமேட்’ தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெறுபவர்கள் இந்த படிப்பில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். மேலாண்மை தகுதி தேர்வும், நேர்காணல் தேர்வும் நடத்தப்படும்.
விருப்பமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழியாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 28-ந் தேதியாகும். மேலும் விரிவான விவரங்களை www.ccsniam.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story