சென்னை புறநகர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
மேற்கு தாம்பரம், புலிகொறடு, காந்தி நகர் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் விருகம்பாக்கம், அமராவதி தெருவை சேர்ந்த டோரி கார்த்திக் என்ற கார்த்திகேயன் (வயது 23), பட் ரோடு, நாசரேத்புரம், மகாலட்சுமியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (19) எனவும் தெரியவந்தது.
பறிமுதல்
மேலும், அவர்கள் இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கடந்த 24-ந் தேதி இரவு பூந்தமல்லி பகுதியில் ஒருவரிடம் இருந்து திருடியது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பூந்தமல்லி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனங்களையும், கடைகளில் இருந்து செல்போன்கள் திருடிவந்ததும் உறுதியானது. இதுதொடர்பாக ஏற்கனவே அவர்கள் 2 பேர் மீதும் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story