வானவில்: உப்பைக் கொண்டு சூரிய சக்தியை சேமிக்கலாம்
மாற்று எரிபொருளாக செயல்படும் சூரிய சக்தியை பயன்படுத்தும் சோலார் தொழில்நுட்பம் பற்றி அனைவரும் அறிவோம்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மிகப் பெரிய அளவில் சூரிய ஒளியை பயன்படுத்தி நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் 35 சதவிகித வீடுகளுக்கு மின்சாரம் தர முடிவு செய்திருக்கிறதாம். பெரும்பாலும் இது போன்ற சோலார் திட்டங்களில் மின்சாரத்தை சேமிப்பது தான் பெரிய சிக்கலாக இருந்து வந்தது.
ஆனால் அரோரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஒரு சிறு துளியும் விரயமாகாமல் சேமிக்க முடியும் என்கின்றனர். பத்தாயிரம் கண்ணாடிகளை சூரிய ஒளியில் படும் படி வைத்து அது சூடான பின்னர் திரவ நிலையில் இருக்கும் உப்பு இதன் மீது போடப்படுகிறது. சூரிய ஆற்றலை உறிஞ்சிக் கொள்ளும் இந்த உப்பு ஒரு டியூப் வழியே சேமிக்கப்படுகிறது. தேவையான போது நீராவி ஜெனெரேட்டர் வழியே இந்த வெப்பமான உப்பு செலுத்தப்பட்டு, தண்ணீரை ஆவியாக மாற்றுகிறது. அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியாகிறது.
உப்பையும் ஒளியையும் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடிவதோடு சேமிக்கவும் வழிவகை செய்திருக்கிறது இந்த ஆய்வு. 2020 -ம் ஆண்டில் முடிவடையும் இத்திட்டத்தின் மூலம் 150 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர் இதன் நிறுவனர்கள்.
Related Tags :
Next Story