தேன்கனிக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியல் 40 பேர் கைது


தேன்கனிக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியல் 40 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2019 3:15 AM IST (Updated: 31 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முத்து, மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், இந்திய ரெயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவதை கைவிட வேண்டும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதே போல அஞ்செட்டியிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story