சென்னை விமான நிலையத்தில் 3½ நிமிடங்களில் 300 வகையான இயற்கை உணவு வேக வைக்காமல், எண்ணெய் இன்றி தயாரித்து கின்னஸ் சாதனை


சென்னை விமான நிலையத்தில் 3½ நிமிடங்களில் 300 வகையான இயற்கை உணவு வேக வைக்காமல், எண்ணெய் இன்றி தயாரித்து கின்னஸ் சாதனை
x
தினத்தந்தி 30 Jan 2019 10:15 PM GMT (Updated: 30 Jan 2019 7:15 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் 3½ நிமிடத்தில் வேக வைக்காமல், எண்ணெய் இன்றி 300 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம், கல்யாண்மயி, படையல் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து 5 நிமிடங்களில் எண்ணெய் இல்லாமல், வேக வைக்காமல் 300 வகையான இயற்கை உணவு தயாரிக்கும் சமையல் திருவிழா மீனம்பாக்கம் விமான நிலைய திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் சமையல் கலைஞர் படையல் சிவக்குமார் தலைமையில் சென்னையில் உள்ள சமையல் கலை பயிலும் கல்லூரி மாணவ–மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் என 700 பேர் கலந்துகொண்டனர்.

இதில் கத்திரிக்காய் மில்க் ஷேக், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், செவ்வாழை பாயாசம், சிறுதானிய அவல் போன்ற 300 வகையான உணவுகளை இயற்கையான காய்கறி, பழங்களை கொண்டு ஆரோக்கியமான முறையில் எண்ணெய் இல்லாமல், வேக வைக்காமல் தயாரிக்கப்பட்டன.

3½ நிமிடங்களில் 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தி நடத்தப்படுத்த இயற்கை உணவு தயாரிக்கும் முறை கின்னஸ் சாதனைக்காக ‘யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்டில்’ பதிவு செய்யப்பட்டது.

இந்த இயற்கை உணவு தயாரிக்கும் பணியை தென் மண்டல விமான நிலையங்களின் இயக்குனர் ஸ்ரீகுமார், சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் எண்ணெய் இல்லாமல், வேக வைக்காமல் 300 வகையான உணவுகளை 3½ நிமிடங்களில் செய்து கின்னஸ் சாதனை படைத்து உள்ளனர். இதன் மூலம் இயற்கை உணவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு வந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஏற்பட வேண்டும்’’ என்றனர்.


Next Story