எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவிடம் சரண் டி.டி.வி.தினகரன் தாக்கு
எடப்பாடி பழனிசாமி பா.ஜனதாவிடம் சரண் அடைந்து விட்டதாக டி.டி.வி.தினகரன் தாக்கி பேசி உள்ளார்.
மாமல்லபுரம்,
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தொகுதியான திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் மேற்கொண்டார். திறந்த வேனில் நின்று கொண்டு அவர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் பாதை மாறி சென்றதால் அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சியில் அமர வைத்தார்.
பிறகு முதல்-அமைச்சர் பதவி இழந்த ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. ஆதரவுடன் தி.மு.க.வுடன் கைகோர்த்து கொண்டு பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார். தற்போது பதவி இழந்துள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பழனிசாமி ஆட்சியை காப்பாற்ற உறுதுணையாக இருந்தனர்.
முதல்-அமைச்சர் பழனிசாமியை தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டெடுப்பில் ஆதரித்து, அவரை வெற்றி பெற வைத்து பதவியில் அமர வைத்தனர். பதவியில் அமர்ந்த உடனேயே ஏறி வந்த ஏணியையே எட்டி உதைத்து எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தார். தன்னையும், தன்னுடன் உள்ள மந்திரிகளையும் காப்பாற்றி கொள்வதற்காக பா.ஜனதாவிடம் சரண் அடைந்து விட்டார்.
திருப்போரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட உள்ள கோதண்டபாணியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மாமல்லபுரம் புதிய பஸ் நிலைய திட்டத்தை எடப்பாடி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இந்த தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெற்றவுடன் மாமல்லபுரம் புதிய பஸ்நிலைய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.
முன்னதாக மாமல்லபுரத்தில் பெண்கள் சிலர் பூரண கும்ப மரியாதை செலுத்தினர்.
இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் பாபு, நகர நிர்வாகிகள் கண்ணன், ரங்கசாமி, ரகு, கோகிலா, ஒன்றிய நிர்வாகிகள் முனுசாமி, சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story